03/04/2026
Janaza announcement
ஜனாஸா அறிவித்தல்
தல்கஸ்பிடிய சேனை பகுதியைச் சேர்ந்த அஸ்ரா அவர்களின் அன்பு மகள் இன்று காலமானார்.
إِنَّا لِلّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
அவர், கத்தாரில் வசிக்கும் அஜ்வாத் உடையார் (📞 00974 71108012) அவர்களின் பேரப்பிள்ளை (மகளின் பிள்ளை) ஆவார் மேலும், அசூர் மற்றும் அர்சாத் ஆகியோரின் சகோதரியின் மகளும் ஆவார்.
தற்போது ஜனாஸா கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
நல்லடக்கம் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இந்த பெரிய இழப்பால் துயரத்தில் உள்ள குடும்பத்தினருக்கு அல்லாஹ் தனது அளவற்ற அருளால் மன அமைதியையும், பொறுமையையும் (சப்ர்) வழங்குவானாக.
இந்த சோதனையை தாங்கும் தைரியத்தையும் உறுதியையும் அவர்களுக்கு அளிப்பானாக.
அவர்களின் துயரத்தை இலகுவாக்கி, இந்த இழப்பிற்கு மாற்றாக நன்மைகளை வழங்குவானாக.
🤲 அல்லாஹ் மர்ஹூமாவுக்கு ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் வழங்குவானாக. ஆமீன்.
28/03/2026
Janaza announcement
ஜனாஸா அறிவித்தல்
ஹெம்மாத்தகமை அமுருப்பை பிரதேசத்தை சேர்ந்த, தற்போது கொஸ்ஸங்க, தல்கஸ்பிடியவில் வசிக்கும் ஹாஜரா உம்மா அவர்கள் 2026.03.28 சனிக்கிழமை தல்கஸ்பிட்டியவில் காலமானார்கள்.
இன்னா லில்லாஹி வாஇன்னா இலைஹி ராஜிஊன்
அன்னார் மர்ஹும்களான சாலிஉடையார், லைலா உம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், முன்னாள் போக்குவரத்து சபை ஊழியர் M.I.M.ஆரிப் (CTB) அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
மேலும்,
பாத்திமா சிஹானா, பாத்திமா பர்ஹானா, பாத்திமா ரிஸ்மினா, பாத்திமா ரிஹானா, முஹம்மது ஸப்வான், பாத்திமா ரிஸ்வானா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அத்துடன்,
தல்கஸ்பிட்டிய கொஸ்ஸங்கயை சேர்ந்த நிஸ்தார் மற்றும் பம்மேக்கடயை , சேர்ந்த கமருத்தீன் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை 2026.03.29 ஞாயிற்றுக்கிழமை லுஹர் தொழுகையுடன் தல்கஸ்பிடிய ஜும்ஆ பள்ளி மையவாடியில் நடாத்த ஏர்பாடு செய்யப்பட்டுள்ளது.
THAQWA
21/03/2026
Eid Mubarak to All THAQWA Members
04/03/2026
ஜனாஸா அறிவித்தல்
Janaza Announcement
தல்கஸ்பிடிய, கோங்காஹகும்புரை பகுதியைச் சேர்ந்த பாத்திமா பீபி (பீபி ஆச்சி) அவர்கள் இவ்வுலகை விட்டு இறைவனடிசேர்ந்தார்.
இன்னா லில்லாஹி வாஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார்,
காலஞ்சென்ற அப்துல் வாஹித் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஐனுல் மர்லியா, பாத்திமா சுரையா, பாத்திமா உசைமா, பாத்திமா நாச்சி, பாத்திமா பேகம், பாத்திமா நசீமா, முஹம்மத் நசீர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
முஹம்மத் தாஹா, காலஞ்சென்ற முஹம்மத் ராசிக், காலஞ்சென்ற பாத்திமா சித்தி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்காரியங்களை ஏற்று, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனத்தை அருள்வானாக. ஆமீன்.
ஜனாஸா தற்போது கோங்காஹகும்புரையில் வசிக்கும் சஹாப்தீன் (சியாம்) அவர்களின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் இழப்பை தாங்கும் மனவலிமையை குடும்பத்தாருக்கு வழங்கி அருள்வானாக இறைவனை வேண்டுகிறோம்.
ஜனாஸா நல்லடக்கம் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
08/02/2026
ஜனாஸா அறிவித்தல்
Janaza Announcement
தல்கஸ்பிட்டிய, கொஸ்ஸங்கயை பிறப்பிடமாகக் கொண்ட, குவைத் நாட்டில் பணிபுரிந்து வந்த முஹம்மத் ஷாஜஹான் முஹம்மத் ஹனீபா அவர்கள் இன்று (08/02/2026, ஞாயிற்றுக்கிழமை )அதிகாலை குவைத்தில் காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
இவர் தல்கஸ்பிட்டிய, கொஸ்ஸங்கயை சேர்ந்த தேயிலை மாமா என அழைக்கப்படும் ஹனீபா மாமா அவர்களின் அன்பு மகனும் பாத்திமா பரூஷா அவர்களின் அன்புக் கணவரும்,ஷேஹா, ஷாஹித், ஸல்ஹா ஆகியோர்களது அன்புத் தந்தையும் இம்தியாஸ், தாலிப், ரிஸ்திகா, ஸரூக்கா ஆகியோர்களது சகோதரருமாவார்.
வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் ஃபிர்தவுஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக
மேலும் அன்னாரின் உற்றார் உறவினர்களுக்கு அன்னாரின் இப்பாரிய இழப்பை தாங்கும் மன வலிமையை வழங்க வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக
07/02/2026
ஜனாஸா அறிவித்தல்
Janaza Announcement
தல்கஸ்பிட்டிய, புதுனேகடையைப் பிறப்பிடமாகவும், வில்பொலையை வசிப்பிடமாகவும் கொண்ட
மர்ஹூம் M.S.M. புஹாரி அவர்களின் மனைவி நதீரா உம்மா முஹம்மத் ஆரிப்ஃ அவர்கள் இன்று மாலை அம்பாறையில் இடம்பெற்ற வீதி விபத்தில் அகாலமரணமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
இவர் தல்கஸ்பிட்டிய, புதுனேகடையைச் சேர்ந்த (கத்தாரிலுள்ள) மக்கீன், மர்ஹூம் மர்சூக் ஆகியோரின் சகோதரியும், வில்பொலையை சேர்ந்த ஹம்ஸா, ரிம்ஸான், ரினோஸா ஆகியோரின் அன்புத் தாயாருமாவார்.
வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் ஃபிர்தவுஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக
அன்னாரின் உற்றார் உறவினர்களுக்கு அன்னாரின் இப்பாரிய இழப்பை தாங்கும் மன வலிமையை வழங்க வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக
31/01/2026
ஜனாஸா அறிவித்தல்
தல்கஸ்பிடியை பிறப்பிடமாகவும்,
மாவனல்லையை வசிப்பிடமாகவும் கொண்ட
சகோதரர் ஹாரிஸ் அவர்கள்
இன்று 31.01.2026 மாவனல்லையில் வஃபாத் அடைந்துள்ளார்.
إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعون
அன்னார்
மௌலவி அப்துல் ரவூப்,
ஸகரியா,
மர்ஹூம் மௌலவி மர்சூக் மற்றும்
முஸம்மில் ஆகியோரின் சகோதரர் ஆவார்.
வல்ல அல்லாஹ் அன்னாரை
ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவனத்தில்
உயர்ந்த இடம் அளிப்பானாக. ஆமீன்.
🕊️ ஜனாஸா / நல்லடக்கம் தொடர்பான தகவல்கள்
பின்னர் அறிவிக்கப்படும் — இன்ஷா அல்லாஹ்.
05/01/2026
THAQWA சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ!
தக்வா இப்தார் நிகழ்வு சம்மந்தமான அறிவித்தல்
இன்ஷா அல்லாஹ் இவ்வருடமும் வழமை போன்று எமது கத்தார் வாழ் தல்கஸ்பிடிய மக்களை ஒன்றிணைக்கும் புனித ரமலான் மாத இப்தார் நிகழ்ச்சியை வெகு விமர்சையாக எதிர்வரும் February மாதம் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்ய எமது நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இடம், நேரம் மற்றும் இது சம்மந்தமான மேலதிக தகவல்கள் இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் அறிவிக்கப்படும். எமது கத்தார் வாழ் தல்கஸ்பிடிய உறவுகளுக்கான இச்சந்திப்பிற்கு இப்பொழுதே உங்கள் கால நேரங்களை ஒதுக்கிக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஜஸாக்கல்லாஹு ஹைரன்!
தக்வா நிர்வாகம்
31/12/2025
நாட்டில் ஏற்பட்ட டித்வா சூறாவளியின் தாக்கத்தில் பாதிக்கப் பட்ட மக்களின் வாழ்வாதார உதவிக்காக தல்கஸ்பிடிய கத்தார் நலன்புரிச் சங்கம் (THAQWA) அமைப்பினால் சேகரிக்கப்பட்ட ரூபாய் 430,000/= வினை கேகாலை மாவட்ட மஸ்ஜித்கள் சம்மேளனத்திடம் வழங்கி வைக்கப்பட்டது. ஏற்கனவே தல்கஸ்பிடிய இரண்டு ஜும்ஆ மஸ்ஜித்களினால் சேகரிப்பு செய்யப்பட்ட பணமும் கேகாலை மஸ்ஜித்கள் சம்மேளனத்திடமே வழங்கி வைக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிதி சேகரிப்புக்காக பணம், பொருள் மற்றும் முயற்சிகளால் உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கும் ஜஸாக்கல்லாஹு ஹைரன்! ❤️
வல்ல இறைவன் அனைவரினதும் நற்காரியங்களை ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கான பரிபூரண நற்கூலியை வழங்குவானாக. ஆமீன்! 🤲🏼
07/12/2025
📢 ஜனாஸா அறிவித்தல்
ஹெம்மாதகமை—ஹிஜ்ராகமையைப் பிறப்பிடமாகவும், தல்கஸ்பிட்டி—தலாவையை வசிப்பிடமாகவும் கொண்ட சித்தி பெளசியா அவர்கள் காலமானார்கள்.
إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
அன்னார் மர்ஹூம்களான அப்துல் ரசீத் – சாரா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
அப்துல் ஹனீ அவர்களின் அன்பு மனைவியும்,
ஹாரூன், பாரீஸ், பதுருன்நிஸா, ஹலிமா, பஸ்மியா, ரிஸ்மியா, முன்தாஜ் ஜெஸ்மின் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
A.S.M. ஜிப்ரி, M.U. லியாவுல் ஹஸன், M.R.M. நயிம் (மெளலவி), M.T. பாஸிம், M.H.M. சிபான், ரிஸ்மியா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
🕌 ஜானாஸா நல்லடக்கம்:
இன்ஷா அல்லாஹ் ஞாயிற்றுக்கிழமை (07.12.2025) லுஹ்ர் தொழுகைக்குப் பின்பு தல்கஸ்பிட்டி ஜூம்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் நடைபெறும்.
06/12/2025
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு திப்பிட்டிய பாடசாலையில் இடம்பெயர்ந்து தங்கியுள்ள பிள்ளைகளுக்காக அவசரமாக Flasks தேவைப்பாடொன்று ஏற்பட்டிருப்பதாக அரநாயக பிரதேச செயலகத்தின் மூலம் request ஒன்று வந்ததற்கிணங்க ரூபா 32,680 பெறுமதியான சுடுநீர் தாங்கும் Flasks கள் இன்று (06.12.2025) எமது தல்கஸ்பிடிய THAQWA நிர்வாக உறுப்பினர்கள் மூலம் அரநாயக பிரதேச செயலகத்திடம் கையளிக்கப்பட்டது.