Thowheed -தவ்ஹீத்

Thowheed -தவ்ஹீத்

Share

அல்குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான நபி

இஸ்லாத்தில் மூல ஆதாரம் திருமறை குர் ஆன் மற்றும் ஆதாரபூர்வமான நபிமொழிகள் மட்டுமே .., அதன் அடிப்படையில் இந்த தலத்தில் அரபு மூலத்துடன் தலைப்பு வாரியாக ஹதீஸ்கள் , ஆக்கங்கள் , பலவீனமான ஹதீஸ்கள் இடம்பெறும்

07/09/2025

தூய்மையான எண்ணம் ( இஹ்லாஸ்) :

قَالَ الْإِمَامُ ابْنُ الْقَيِّمِ رَحِمَهُ اللَّهُ:

"الْإِخْلَاصُ هُوَ مَا لَا يَعْلَمُهُ مَلَكٌ فَيَكْتُبَهُ وَلَا عَدُوٌّ فَيُفْسِدَهُ وَلَا يُعْجَبُ بِهِ صَاحِبُهُ فَيَبْطُلَهُ"
[الفَوَائِدُ: ١/٩٩]

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

இஹ்லாஸ் (தூய்மையான எண்ணம்) என்பது, ஒரு வானவர் அறியாத ஒரு காரியமாகும், அதனால் அவர் அதை எழுத மாட்டார். எந்தப் பகைவனும் அதை கெடுத்துவிட மாட்டான். மேலும், அதைச் செய்தவர் அதைக் கண்டு பெருமை கொள்ள மாட்டார், அதனால் அது வீணாகிப் போகாது.

நூல் : அல்-ஃபவாயித் ١/٩٩

பொருள் :

இஹ்லாஸ் என்பது உள்ளத்தின் ஒரு செயல். இது வெளிப்படையாகத் தெரியாது, அது முழுக்க முழுக்க அல்லாஹ்வுக்காகவே செய்யப்படும் ஒரு தூய எண்ணம்.

ஒரு வானவர் அறியாதது என்பதன் பொருள் :

நம்முடைய செயல்களைப் பதிவு செய்யும் வானவர்களால், ஒருவரது உள்ளத்தில் உள்ள இஹ்லாஸின் அளவை சரியாக அறிய முடியாது. ஏனெனில் அது அல்லாஹ்விற்கும் அவனது அடியானுக்கும் இடையில் உள்ள ஓர் இரகசியமாகும். அல்லாஹ் மட்டுமே உள்ளங்களின் எண்ணங்களை முழுமையாக அறிபவன்.

قُلۡ اِنۡ تُخۡفُوۡا مَا فِىۡ صُدُوۡرِكُمۡ اَوۡ تُبۡدُوۡهُ يَعۡلَمۡهُ اللّٰهُ ‌ؕ وَيَعۡلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الۡاَرۡضِؕ‌ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىۡءٍ قَدِيۡرٌ ‏﴿۲۹﴾

"உங்கள் உள்ளங்களில் உள்ளதை நீங்கள் மறைத்தாலோ, வெளிப்படுத்தினாலோ அதை அல்லாஹ் அறிகிறான். வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் அவன் அறிகிறான். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்" என்று கூறுவீராக!

[அல்குர்ஆன் 3:29]

وَاَسِرُّوۡا قَوۡلَـكُمۡ اَوِ اجۡهَرُوۡا بِهٖؕ اِنَّهٗ عَلِيۡمٌۢ بِذَاتِ الصُّدُوۡرِ‏ ﴿۱۳﴾

உங்கள் கூற்றை இரகசியமாக்குங்கள்! அல்லது அதைப் பகிரங்கமாகக் கூறுங்கள்! உள்ளங்களில் உள்ளதையும் அவன் அறிந்தவன்.

[அல்குர்ஆன் 67:13]

பகைவனும் கெடுக்க மாட்டான் என்பதன் பொருள் :

ஷைத்தான் (பகைவன்), மனிதர்களின் நற்செயல்களில் ஊடுருவி அதை வீணாக்க முயற்சிப்பான். ஆனால், ஒருவரது உள்ளத்தில் தூய்மையான எண்ணம் ஆழமாக வேரூன்றி இருந்தால், அந்த எண்ணத்தை ஷைத்தானால் கெடுக்கவோ அல்லது அழித்துவிடவோ முடியாது.

பெருமையால் வீணாகாது என்பதன் பொருள் :

ஒரு நற்செயலைச் செய்துவிட்டு, அதைப் பற்றி சுயபெருமை கொள்வது (ரியா) அந்த செயலின் பலனை அழித்துவிடும்.

இஹ்லாஸ் உள்ள ஒருவன் தன் செயலை அல்லாஹ்வின் திருப்திக்காக மட்டுமே செய்வதால், அவன் அதில் பெருமை கொள்ள மாட்டான். எனவே, அந்த நல்ல செயல் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதற்குரிய பலன் மறுமையில் கிடைக்கும்.

மொத்தத்தில், இஹ்லாஸ் என்பது நம் செயல்களுக்குப் பாதுகாப்பு அளித்து, அவை வீணாகாமல் அல்லாஹ்வின் அங்கீகாரத்தைப் பெற உதவுகிறது.

09/03/2025

தேவையற்ற விஷயங்களில் மூழ்கி எல்லை மீறப் பேசுவதையும் வெறுத்தல் :

سنن الدارمي - 140

أَخْبَرَنَا أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ قُدَامَةَ ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ ، عَنْ مِسْعَرٍ ، قَالَ : أَخْرَجَ إِلَيَّ مَعْنُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ كِتَابًا ، فَحَلَفَ لِي بِاللَّهِ أَنَّهُ خَطُّ أَبِيه ، فَإِذَا فِيهِ : قَال عَبْدُ اللَّهِ : " وَالَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ مَا رَأَيْتُ أَحَدًا كَانَ أَشَدَّ عَلَى الْمُتَنَطِّعِينَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَمَا رَأَيْتُ أَحَدًا كَانَ أَشَدَّ عَلَيْهِمْ مِنْ أَبِي بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ ، وَإِنِّي لَأَرَى عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ كَانَ أَشَدَّ خَوْفًا عَلَيْهِمْ أَوْ لَهُمْ " .

حسين أسد: إسناده صحيح
سنن الدارمي: (249/1)

மஅன் இப்னு அப்திர் ரஹ்மான் ( ரஹ்) என்னிடம் ஒரு கடிதத்தைக் காட்டினார். நிச்சயமாக ! அது தன் தந்தையின் கையெழுத்து தான் என்று என்னிடம் சத்தியம் செய்து கூறினார். அந்தக் கடிதத்தில் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ( ரலி ) கூறியதாக இருந்தது :

யாரைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் யாருமில்லையோ அவன் மீது ஆணையாக ! தேவையற்ற விஷயங்களில் மூழ்கி எல்லைமீறிப் பேசக்கூடியவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் ( ஸல் )அவர்கள் கடுமையாக நடந்துகொண்டதைப் போல் வேறு யாரிடமும் ( அவ்வாறு அவர்கள் நடந்ததை) நான் கண்டதில்லை.

இத்தகையவர்களிடம் அபூபக்ர் ( ரலி ) கடுமைக்காட்டியது போல் வேறு யாரிடமும் ( அவ்வாறு அவர்கள் நடந்ததை) நான் கண்டதில்லை.

இவர்கள் விஷயத்தில் அதிகம் அஞ்சக்கூடியவராக உமர் ( ரலி ) அவர்கள் இருந்ததை நிச்சயமாக ! நான் பார்த்தேன்.

இதை மிஸ்அர் ( ரஹ் ) அறிவிக்கிறார்கள்

நூல் : தாரமீ 140 தரம் : ஸஹீஹ்

Want your business to be the top-listed Government Service in Doha?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Doha

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00