R Chellaswamy MLA

  • Home
  • R Chellaswamy MLA
Directions Website

R Chellaswamy MLA CPI(M)'s Padmanabhapuram Assembly Constituency MLA

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சடையமங்கலம் கிராம ஊராட்சியில், உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்ட...
02/11/2026

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சடையமங்கலம் கிராம ஊராட்சியில், உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு 01.11.2026 அன்று ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

இக்கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திரு. மு. பிரதாப், IAS அவர்களும் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள், ஊராட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் பசுமைச் சூழலையும் மேம்படுத்தும் நோக்கில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




#கிராமசபைக்கூட்டம்

கிறிஸ்து நகரில் அமைந்துள்ள புனித சிலுவை மருத்துவமனையின் (Sisters of the Holy Cross) நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற GRA...
31/10/2026

கிறிஸ்து நகரில் அமைந்துள்ள புனித சிலுவை மருத்துவமனையின் (Sisters of the Holy Cross) நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற GRAND CENTENARY PUBLIC MEETING நிகழ்ச்சியில் இன்று மாலை கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினேன்.

கடந்த 100 ஆண்டுகளாக சாதி, மத பேதமின்றி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தன்னலமற்ற மருத்துவச் சேவையை வழங்கி வரும் புனித சிலுவை சபையின் அருட்சகோதரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனைப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நூற்றாண்டு கால மக்கள் சேவை மேலும் பல நூற்றாண்டுகள் தொடர்ந்து, ஏழை, எளிய மக்களின் நலனுக்காகப் புனித சிலுவை மருத்துவமனை சிறப்புடன் வளர்ந்து மக்கள் பணியாற்றிட எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



31/10/2026

பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொன்மனை பேரூராட்சி, #காயால்கரை பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அறிந்து, இன்று அவர்களது கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன்.

அப்போது, மழைக்காலங்களில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் மற்றும் சாலை வசதிகள் குறித்து ஆய்வு செய்ததுடன், அப்பகுதி மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தேன்.

மக்கள் முன்வைத்த முக்கியக் கோரிக்கைகள்:

மழைக்காலங்களில் அப்பகுதியில் ஆள் உயரத்திற்கு தண்ணீர் தேங்குவதால், இருபுறங்களிலும் வசிக்கும் தலா 10 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் அந்தப் பகுதியைக் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுவதாகவும், குறிப்பாகப் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழல் உருவாவதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும், தங்களது பகுதியில் போதிய குடிநீர் வசதி இல்லாததால் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவித்தனர்.

மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த நான்,

1. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து குடிநீர் வசதிக்காகப் புதிய கிணறு அமைத்து, 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கான பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தேன்.

2. சாலை வசதியை மேம்படுத்துவது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தேன்.



திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், திற்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட திருநந்திக்கரை பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளிகளில் இன்ற...
30/10/2026

திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், திற்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட திருநந்திக்கரை பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளிகளில் இன்று ஆய்வு மேற்கொண்டேன்.

முதலில், #திருநந்திக்கரை அரசு உயர்நிலைப்பள்ளியில் துணைத் தலைமை ஆசிரியருடன் இணைந்து பள்ளிக் கட்டிடங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். அப்போது, ஆசிரியர்கள் பள்ளியின் அடிப்படை வசதிகள் தொடர்பாகப் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

- மழைக்காலங்களில் பள்ளிக் கட்டிடங்களில் ஏற்படும் மழைநீர் கசிவைச் சரிசெய்தல்.
- கழிப்பறைகளைச் சீரமைத்து மேம்படுத்துதல்.
- பள்ளிக் கட்டிடங்களுக்கு இடையூறாக உள்ள மரங்களை அகற்றுதல்.

ஆசிரியர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தேன்.

தொடர்ந்து, திருநந்திக்கரை அரசு தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டபோது, பள்ளியின் முன்புறம் அமைந்துள்ள ஓடையின் தடுப்புச் சுவரைச் சீரமைக்கவும், பள்ளியின் கழிப்பறை வசதிகளை மேம்படுத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இக்கோரிக்கைகள் குறித்தும் உரிய ஆய்வு மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தேன்.



திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, 80 ஆண்டுகள் பழமையான  #உன்னியூர்கோணம் அரசு நடுநிலைப்பள்ளியில் இன்று ஆய்வு மேற்க...
30/10/2026

திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, 80 ஆண்டுகள் பழமையான #உன்னியூர்கோணம் அரசு நடுநிலைப்பள்ளியில் இன்று ஆய்வு மேற்கொண்டேன்.

அப்போது, பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், சேதமடைந்துள்ள பழைய பள்ளிக் கட்டிடத்திற்குப் பதிலாகப் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்றும், பள்ளியின் முன்புற மைதானத்தைச் (இன்டர் லாக்) சீரமைத்துத் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, பள்ளியின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் நலனுக்கும் தேவையான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் எனத் தெரிவித்தேன்.



பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட  #கோதநல்லூர் பேரூராட்சியில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களைப் பரிசீலனை ச...
29/10/2026

பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட #கோதநல்லூர் பேரூராட்சியில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களைப் பரிசீலனை செய்து, இன்று மாலை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன்.
அப்போது, பொதுமக்களின் கோரிக்கைகளான,
பட்டாணிகுளம் அருகே சுடுகாட்டிற்குப் பக்கச்சுவர் அமைத்தல்.

முட்டைக்காடு அரசு தொடக்கப்பள்ளி முன்பு புதிய பாலம் அமைத்தல்.

சரல் ரப்பர் தோட்டத்திற்குச் செல்லும் சாலையைச் சீரமைத்தல்.

குருவிக்காட்டுவிளையில் பழுதடைந்த பாலத்தைச் சீரமைத்தல்.

ஆகிய கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு, பொதுமக்களின் தேவைகளையும் குறைகளையும் கேட்டறிந்தேன்.

மேற்கண்ட பணிகளை மேற்கொள்வதற்கான ஆயத்தப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனப் பொதுமக்களிடம் தெரிவித்தேன்.



திருவட்டார் வட்டாரம்,  #குட்டக்குழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று காலை ஆய்வு மேற்கொண்டேன்.அப்போது, வட்டார சுகாதார...
29/10/2026

திருவட்டார் வட்டாரம், #குட்டக்குழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று காலை ஆய்வு மேற்கொண்டேன்.

அப்போது, வட்டார சுகாதார ஆய்வகக் கட்டிடத்தைப் பார்வையிட்டு, அதனை உடனடியாகச் சீரமைக்க அதிகாரிகளுக்கு வலியுறுத்தினேன். மேலும், ஆய்வகம் மற்றும் எக்ஸ்-ரே பிரிவுகளை ஆய்வு செய்து, அவற்றின் செயல்பாடுகள் மற்றும் தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தேன்.

தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த சேவை மையத்தை ஆய்வு செய்து, அங்கிருந்த குழந்தைகளுடன் கலந்துரையாடி, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தேன். அப்போது, அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

அவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தேன்.

இந்த ஆய்வின்போது மருத்துவர்கள், மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.



திருவட்டார் பேரூராட்சி மற்றும் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும்  #தோட்டவாரம் அரசு நடுநிலைப்பள்ளி ஆகிய...
29/10/2026

திருவட்டார் பேரூராட்சி மற்றும் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் #தோட்டவாரம் அரசு நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டேன்.

அப்போது, பள்ளிகளின் அடிப்படை வசதிகள், வகுப்பறைகள், கழிப்பறைகள் மற்றும் குடிநீர் வசதிகள் குறித்து ஆய்வு செய்ததுடன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தேன்.

திருவட்டார் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு புதிய மேற்கூரை அமைக்கவும், மேல் நிலை பள்ளியாக தரம் உயர்த்தவும், தோட்டவாரம் அரசு நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தேன்.

இந்த ஆய்வின்போது பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உடனிருந்தனர்.




28/10/2026

பொதுமக்களின் நீண்டகாலக் கோரிக்கையைத் தொடர்ந்து, திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவிலின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பழமையான கல் மண்டபத்தைப் புனரமைக்கத் தமிழ்நாடு அரசு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.





கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் தொகுதிக்குட்பட்ட  #மாறாமலை மலைப்பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்டு, பழங்குடி மக்களின் ...
27/10/2026

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் தொகுதிக்குட்பட்ட #மாறாமலை மலைப்பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்டு, பழங்குடி மக்களின் குறைகளைக் கேட்டறிந்தேன்.

சாலை, மின்சாரம், பேருந்து, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தேன்.

மேலும், உயர்மட்டப் பாலம் அமைப்பது, பழுதடைந்த சாலைகளைச் சீரமைப்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டேன்.

தொடர்ந்து, அரசு உதவிபெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளிக்குச் சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் குறைகளையும் கேட்டறிந்தேன்.



Address


Alerts

Be the first to know and let us send you an email when R Chellaswamy MLA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your organization to be the top-listed government service?

Share