29/10/2026
வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு 2027 உத்தியோகபூர்வமாக அறிமுகம்.
2027 උතුරු අපනයනකරුවන්ගේ සමුළුව නිල වශයෙන් ආරම්භ කරන ලදී.
Official Launch of Northern Exporters Forum – 2027
வடக்கு மாகாணத்தின் வளங்களையும் உற்பத்தித் திறனையும் சர்வதேசச் சந்தைகளுடன் இணைத்து, ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம் மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான பங்களிப்பை 4.5 வீதத்திலிருந்து 10 வீதமாக உயர்த்தும் இலக்கை அடைவதற்கு வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு 2027 பெரிதும் துணைநிற்கும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
2027 ஜனவரி 20, 21ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ள வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு 2027 தொடர்பான உத்தியோகபூர்வ அறிமுகமும் திட்ட விளக்கக் கூட்டமும் ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று (29.10.2026) வியாழக்கிழமை காலை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இலங்கை முகாமைத்துவக் கழகத்தின் ஏற்பாட்டில், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் தலைமையில், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகம் உள்ளிட்ட பங்காளர்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் இம்மாநாடு, வடக்கு மாகாணத்தின் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் சிறிய, நடுத்தரத் தொழில் முயற்சியாளர்களுக்குப் புதிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வடக்கு மாகாணத்தின் வளங்களைப் பொருளாதார வலிமையாக மாற்ற வேண்டும்
கூட்டத்தின் ஆரம்பத்தில் உரையாற்றிய ஆளுநர், வடக்கு மாகாணம் இயற்கை வளங்களிலும் மனித வளங்களிலும் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டார். விவசாயம், கடற்றொழில், பனைசார் உற்பத்திகள், கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள், தகவல் தொழில்நுட்பச் சேவைகள், சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காணப்படும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
இவ்வாண்டு வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்திய இலங்கை முகாமைத்துவக் கழகம், அடுத்த கட்டமாக ஏற்றுமதியாளர் மாநாட்டை முன்னெடுப்பது மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயனளிக்கும் என ஆளுநர் தெரிவித்தார். முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமன்றி, உள்ளூர் உற்பத்திகளைப் பரந்த சந்தைகளுக்குக் கொண்டு சென்று விற்பனை வாய்ப்புகளை உருவாக்குவதும் அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார்.
மாண்புமிகு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் சாதகமான அணுகுமுறையைக் கொண்டிருப்பதாகவும், பல அமைச்சர்கள் மாகாணத்தின் வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார். ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ள முதலீட்டு வலயங்கள் அடுத்த ஆண்டில் செயற்படத் தொடங்கும் எனத் தாம் நம்புவதாகவும், முதலீடு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி முயற்சிகள் ஒன்றிணைந்து முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உருவாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான பங்களிப்பை 4.5 வீதத்திலிருந்து 10 வீதமாக உயர்த்தும் இலக்கை நோக்கிப் பயணிப்பதற்கு, உற்பத்தியை அதிகரித்தல், பெறுமதி சேர்த்தல், புதிய சந்தைகளை அடைதல், முதலீடுகளை ஈர்த்தல் ஆகியவை முக்கியமானவை எனவும் ஆளுநர் வலியுறுத்தினார்.
உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு உலகச் சந்தை வாய்ப்புகள்
வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு, உள்ளூர் உற்பத்தியாளர்களையும் சர்வதேசக் கொள்வனவாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களையும் நேரடியாக இணைக்கும் தளமாக அமையவுள்ளது. வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கும் வழங்கப்படும் சேவைகளுக்கும் வெளிநாட்டுச் சந்தைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன், ஏற்றுமதிக்குத் தயாராகும் தொழில் முயற்சியாளர்களின் திறன்களையும் மேம்படுத்துவது மாநாட்டின் முக்கிய நோக்கங்களாகும்.
விவசாயம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், பனைசார் உற்பத்திகள், கடலுணவுகள் மற்றும் மீன்பிடிப் பொருட்கள், கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் இலத்திரனியல் சேவைகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சிறிய கைத்தொழில்கள், இயற்கை நலவாழ்வுப் பொருட்கள், பாரம்பரிய மருத்துவம், சுகாதார உபகரணங்கள், சுற்றுலா, மரபுரிமை மற்றும் பண்பாட்டுத் துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மாநாட்டில் முக்கியத்துவம் பெறவுள்ளன.
இந்தத் துறைகளைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் தமது பொருட்களையும் சேவைகளையும் அறிமுகப்படுத்துவதற்கும், சந்தைத் தேவைகளை அறிந்துகொள்வதற்கும், வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களுடன் புதிய தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும் மாநாடு வழிவகுக்கும். குறிப்பாக, இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டுச் சந்தைகளையும், ஐக்கிய இராச்சியம், கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள புலம்பெயர் வர்த்தக வலையமைப்புகளையும் பயன்படுத்தி வடக்கு மாகாண உற்பத்தியாளர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
கண்காட்சி, நேரடி வர்த்தகச் சந்திப்புகள் மற்றும் திறன் மேம்பாடு
இரண்டு நாள்கள் நடைபெறவுள்ள மாநாட்டில் ஏற்றுமதி தொடர்பான கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கண்காட்சி, சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சிகளின் அறிமுகங்கள், நேரடி வர்த்தகச் சந்திப்புகள் ஆகியவை இடம்பெறவுள்ளன.
குறைந்தது 50 முதல் 75 வரையான நேரடி வணிகத் தொடர்புச் சந்திப்புகளை ஏற்படுத்துவதையும், 75 முதல் 100 வரையான தகுதியான கொள்வனவாளர்களை ஈர்ப்பதையும் இலக்காகக் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்கள் தமது பொருட்களின் தரம், விலை, விநியோகம் மற்றும் ஏற்றுமதிச் சாத்தியங்கள் குறித்து கொள்வனவாளர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடுவதற்கும், நீண்டகால வணிக உறவுகளை உருவாக்குவதற்கும் இதன்மூலம் வாய்ப்பு ஏற்படும்.
ஏற்றுமதி வளர்ச்சிக்கு அவசியமான சர்வதேசச் சந்தைத் தகவல்கள், வெளிநாட்டு வர்த்தக விதிமுறைகள், தரச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான நடைமுறைகள், வர்த்தக நிதி மற்றும் இடர் முகாமைத்துவம், பொருட்களின் போக்குவரத்து மற்றும் விநியோகச் சங்கிலி ஏற்பாடுகள் தொடர்பிலும் உற்பத்தியாளர்களுக்கு வழிகாட்டல்கள் வழங்கப்படவுள்ளன.
இதற்கான முன்னேற்பாடாக, எதிர்வரும் நவம்பர் 3, 4ஆம் திகதிகளில் பயிற்சிப் பட்டறைகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பட்டறைகள் மற்றும் அவற்றுக்குப் பின்னரான வழிகாட்டல் செயற்பாடுகள் ஊடாக, ஏற்றுமதிக்குத் தயாராகும் தொழில் முயற்சியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும் அவர்களின் வணிகத் தயார்நிலையை வலுப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளைச் சர்வதேசத் தரத்துக்கு உயர்த்துதல், புதிய சந்தைகளுக்குள் நுழைவதற்கான வழிகாட்டல்களை வழங்குதல், நிதி நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்கும் அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துதல் ஆகியவையும் மாநாட்டின் முக்கிய செயற்பாடுகளாக அமையவுள்ளன.
இம்மாநாட்டை இலங்கை முகாமைத்துவக் கழகம் ஏற்பாடு செய்கின்றது. கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு இதற்குத் தலைமையேற்று ஆதரவு வழங்குகின்றது. யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகம் முக்கிய ஒத்துழைப்புப் பங்காளராகச் செயற்படுகின்றது. ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனம், தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் கைத்தொழில் அபிவிருத்திச் சபை ஆகியன முக்கிய பங்காளர்களாக இணைந்துள்ளன. வவுனியா பல்கலைக்கழகம் பிராந்தியத் திட்ட முகாமைத்துவப் பிரிவாகச் செயற்படுவதுடன், ஆளுநர் செயலகம், மாகாணச் செயலகம் மற்றும் மாவட்டச் செயலகங்கள் பிராந்திய ஒருங்கிணைப்புப் பணிகளில் பங்களிக்கவுள்ளன.
முதலீட்டாளர்களின் அனுமதிச் சிக்கல்களைக் குறைக்க முத்தரப்பு ஒப்பந்தம்
முதலீட்டாளர்கள் பல்வேறு திணைக்களங்களிடமிருந்து அனுமதிகளைப் பெறுவதில் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைத்து, முதலீட்டுச் செயற்பாடுகளை எளிதாக்கும் நோக்கில் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்ட இணையத்தளத் திட்டத்தை உத்தியோகபூர்வமாக முன்னெடுப்பதற்கான முத்தரப்பு ஒப்பந்தம் இன்றைய கூட்டத்தில் கைச்சாத்திடப்பட்டது.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வவுனியா பல்கலைக்கழகத் துணைவேந்தர் அற்புதராஜா மற்றும் இலங்கை முகாமைத்துவக் கழகத்தின் திட்டத் தலைவர் கௌசல் ராஜபக்ச ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.
முதலீட்டாளர்கள் பல்வேறு திணைக்களங்களுடனும் நிறுவனங்களுடனும் தனித்தனியாகத் தொடர்புகொண்டு அனுமதிகளைப் பெறும்போது எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களைக் குறைப்பது இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் முதலீட்டுச் செயற்பாடுகளுக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்வதையும், சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் தொடர்புகளை ஒருங்கிணைப்பதையும் இலகுவாக்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்து மாவட்டங்களிலும் பாடசாலைத் தோட்டங்கள் அமைக்கும் திட்டம்
வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் பாடசாலைத் தோட்டங்களை உருவாக்கும் செயற்றிட்டமும் இன்றைய நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு பாடசாலை தெரிவுசெய்யப்பட்டு, அங்கு பாடசாலைத் தோட்டங்கள் அமைக்கப்படவுள்ளன. இச்செயற்றிட்டத்தை லயன்ஸ் கழகத்தின் ஊடாகத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தின் வளங்களைப் பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிப்பதோடு, அவற்றைச் சர்வதேசச் சந்தைகளுக்கு ஏற்ற பொருட்களாக மாற்றி, மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஏற்றுமதி வருமானத்துக்கும் வலுச்சேர்க்கும் நீண்டகால முயற்சியாக வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு 2027 அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கலந்துரையாடலில் இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய் முரளி அவர்களும், வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்டச் செயலகங்களின் திட்டமிடல் பணிப்பாளர்கள், முகாமைத்துவக் கழகத்தின் உறுப்பினர்கள், பல்வேறு வர்த்தக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் பங்கேற்றனர்.
வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு
29.10.2026
සමස්ථ දේශීය නිෂ්පාදනයට (GDP) උතුරු පළාතේ දායකත්වය සියයට 4.5 සිට සියයට 10 දක්වා වැඩි කිරීමේ අරමුණින්, 'උතුරු අපනයනකරුවන්ගේ සමුළුව 2027' පිළිබඳ නිල දියත් කිරීමේ සහ ව්යාපෘති දැනුවත් කිරීමේ රැස්වීම අද (2026.10.29) ආණ්ඩුකාරතුමා එන්. වේදනායකන් මහතාගේ ප්රධානත්වයෙන් ආණ්ඩුකාර ලේකම් කාර්යාලයේදී පැවැත්විණි. 2027 ජනවාරි 20 සහ 21 යන දිනවල යාපනයේ තිරුවල්ලුවර් සංස්කෘතික මධ්යස්ථානයේදී පැවැත්වෙන මෙම සමුළුවේ මූලික අරමුණ වන්නේ දේශීය නිෂ්පාදකයින් සහ කුඩා හා මධ්ය පරිමාණ ව්යවසායකයින් සඳහා නව ජාත්යන්තර වෙළඳපොළ අවස්ථා නිර්මාණය කිරීමයි.
ශ්රී ලංකා කළමනාකරණ ආයතනය විසින් කර්මාන්ත අමාත්යාංශය සහ ඉන්දියානු කොන්සල් ජනරාල් කාර්යාලය සමඟ සහයෝගයෙන් සංවිධානය කරන ලද මෙම සමුළුව කෘෂිකර්මාන්තය, ධීවර කටයුතු, තල් නිෂ්පාදන, තොරතුරු තාක්ෂණය සහ සංචාරක ව්යාපාරය ඇතුළු අංශවල නිෂ්පාදන ජාත්යන්තර ගැනුම්කරුවන්ට ප්රදර්ශනය කරනු ඇත. නොවැම්බර් මාසයේදී පැවැත්වෙන B2B ව්යාපාරික රැස්වීම්, ප්රදර්ශන සහ කුසලතා සංවර්ධන වැඩමුළු, දේශීය ව්යාපාරිකයින් ඩයස්පෝරා ජාල සහ විදේශීය සමාගම් සමඟ සෘජුවම සම්බන්ධ කරන මෙම උත්සවයේ ප්රධාන අංග වනු ඇත.
රැස්වීම අතරතුර,ගරු ආණ්ඩුකාරතුමා වවුනියාව විශ්ව විද්යාලය සහ ශ්රී ලංකා කළමනාකරණ ආයතනය සමඟ වෙබ් පාදක ව්යාපෘතියක් සඳහා ත්රෛපාර්ශ්වික ගිවිසුමකට අත්සන් තැබූ අතර එමඟින් දෙපාර්තමේන්තු අනුමැතිය ලබා ගැනීමේදී ආයෝජකයින් මුහුණ දෙන ක්රියා පටිපාටිමය බාධක අඩු කරනු ඇත. සිංහ සමාජය හරහා දිස්ත්රික්ක පහේම පාසල් උද්යාන ස්ථාපිත කිරීමේ නව ව්යාපෘතියක් ද දියත් කරන ලදී. මෙම අවස්ථාවට ඉන්දීය නියෝජ්ය මහ කොමසාරිස් සායි මුරලි ඇතුළු ජ්යෙෂ්ඨ රජයේ නිලධාරීන් සහ ව්යාපාරික නියෝජිතයින් සහභාගී විය.
උතුරු පළාත් ආණ්ඩුකාර මාධ්ය අංශය
2026.10.29
The meeting on official launch and project briefing regarding “Northern Exporters Forum -2027” was held today (29.10.2026) at Governor’s Secretariat in order to increase the Gross Domestic Production of Northen Province from 4.5 % to 10%. The forum which is to be held on 20th & 21st of January 2027 primarily aims at creating new global market opportunities for local producers and small and medium sized entrepreneurs.
The forum organized by the Management Club of Sri Lanka jointly with Ministry of Industry and Consular General of India, will introduce products related to agriculture, fisheries, palmyrah and departmental products including information technology and tourism to the global buyers. B2B meet-ups that directly connects the local businessmen with the diaspora network and foreign institutions, exhibitions and skill development workshops will be the key aspects of this forum.
During the meeting, the Governor entered into a trilateral agreement with University of Vavuniya and Management Club of Sr Lanka for the web project that reduce the practical issues investors face in obtaining departmental approvals. A new project of creating school gardens in five districts also was also launched. The Consul General of India, Sai Murali, higher officials in government sector and business representatives also participated in the event.
#வடக்கு_மாகாணம் #ஆளுநர்_வடக்கு. #උතුරුපළාත #ආණ්ඩුකාරවරයා