Sammanthurai Pradeshiya Sabha

Sammanthurai Pradeshiya Sabha

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sammanthurai Pradeshiya Sabha, Government Official, Main Street , Ampara Road, Sammanthurai.

27/05/2026

இப்றாஹீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் இந்நாளில் முஸ்லிம்களின் வாழ்வில் தியாக உணர்வுகள் மென்மேலும் அதிகரிக்க, ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மன மகிழ்ச்சியடைகிறேன் என சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில்,

“விருப்பமானவற்றை இறைவனுக்காகவும், சக மனிதர்களுக்காகவும் தியாகம் செய்யுமாறு இஸ்லாம் போதிக்கிறது. இன்று நம்மிடையே ஏராளமானோர் வறுமையோடு போராடிக் கொண்டு வாழ்க்கையை நடத்தி வருகின்றனர் என்பதை இந்தத் தியாகத் திருநாளில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்வதன் ஊடாக நாம் இறைவனின் பொருத்தத்தைத் தேடிக் கொள்ள வேண்டும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் கலாசார சூழலில் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளையும் உரிமைகளையும் வென்றடுப்பதற்காக முஸ்லிம்கள் அனைவரும் பேதங்களை மறந்து ஒற்றுமைப்பட இப்புனித நாளில் திடசங்கற்பம் பூண வேண்டும். மேலும், இந்த இனிய பெருநாள் தினத்தில் எமது சமூகத்தவர்களுடனும், பிற சமூகத்தவர்களுடனும் ஒற்றுமையுடன் வாழ நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.

இந்தப் புனிதமான ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் மற்றும் உலக வாழ் அனைத்து இஸ்லாமிய உள்ளங்களுக்கும், வெளிநாடுகளில் தொழில் புரியும் எமது சகோதரர்களுக்கும் எனது உளம் கனிந்த ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைகிறேன்” என மேலும் தெரிவித்துள்ளார்.

Photos from Sammanthurai Pradeshiya Sabha's post 21/05/2026

ஹஜ்ஜுப் பெருநாள் வியாபார நடவடிக்கைக்காக
அப்துல் மஜீட் மண்டப வளாகம் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனவே, அப்துல் மஜீட் மண்டப வளாகத்தில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய விரும்பும் வியாபாரிகள் கீழ் குறிப்பிட்ட தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

📞 077 7487890
📞 0772633295

#தகவல்_மையம்
சம்மாந்துறை பிரதேச சபை
☎ 067 203 0800

21/05/2026

2026 வெசாக் தினத்தை முன்னிட்டு இறைச்சி விற்பனை நிலையங்களை மூடுதல் தெர்பான அறிவித்தல்

#தகவல் மையம்
சம்மாந்துறை பிரதேச சபை
☎ 067 203 0800

19/05/2026

அஸ்ஸலாமு அலைக்கும்

சம்மாந்துறை வாழ் முஸ்லிம் மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

உழ்ஹிய்யாவுடைய அமல்களை நிறைவேற்றுவோர் பின்வரும் வழிகாட்டல்களைப் பின்பற்றி மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்

1.2026 மே மாதம் 28ம் திகதியும் 29ம் திகதியும் மாத்திரம் உழ்ஹிய்யாக் கடமைக்காக மாடுகளை அறுப்பதற்கு அனுமதியளிக்கப்படும்.

2.எதிர்வரும் 2026.05.30,31 மற்றும் 2026.06.01 ஆகிய 03 தினங்களும் வெசாக் வாரத்திற்குள் அடங்குவதனால் மேற்படி 03 தினங்களிலும் பிராணிகளை அறுப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

3.அறுக்கப்படும் கால்நடைகளின் கழிவுகளை கண்ட கண்ட இடங்களில் வீசி எமது சுற்றாடலை மாசுபடுத்தாமல் கீழ்வரும் இடங்களில் 2026.05.28, 2026.05.29 ஆகிய இரு தினங்களில் மாத்திரம் பிரதேச சபையினால் வைக்கப்பட்டுள்ள உழவு இயந்திரப் பெட்டிகளில் இடுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

1. அலவக்கரை வீதி பெரிய பள்ளிவாசல் - பின் வீதி

2. அலவக்கரை MPCS மில் அருகாமை - புதுப் பள்ளிக்கு பின்புறம்

3. ஆண்டி சந்தி சமீட் புரம் வீதி

4. முகைடீன் மாவத்தையில் செட்டியா வட்டைச் சந்தி

5. மல்கம்பிட்டி வீதியில் கைகாட்டிச் சந்தி (பழைய விலங்கறுமனை அருகில்)

6. சேகலயர் வண்டு இறைச்சிக் கடைக்கு அருகாமை

7. ஹிஜ்றா சந்தி

4. அறுவைக்காகப் பயன்படுத்திய இடத்திலும் அதன் கழிவுப் பொருட்களை புதைத்த இடத்திலும் கிருமி நாசினிகளைத் தெளித்து சூழல், சுற்றாடல் சுத்தத்தை உத்தரவாதப்படுத்தல் வேண்டும்.

5. உழ்ஹிய்யா நிறைவேற்றப்படும் போது படங்கள் அல்லது வீடியோக்கள் எடுப்பதை தவிர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அவற்றை பகிர்ந்து கொள்வதை கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

ஐ.எல்.எம்.மாஹிர்
தவிசாளர்
சம்மாந்துறை பிரதேச சபை
2026.05.19

Photos from Sammanthurai Pradeshiya Sabha's post 16/05/2026

மழையுடனான காலநிலை காரணமாக ஏற்பட்ட நீர்தேக்க நிலையைத் தடுக்கும் நோக்கில், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் வழிகாட்டலில் அல்-மூனீர் பாடசாலையைச் சுற்றியுள்ள வடிகான்கள் மற்றும் ஜமாலியா பள்ளிவாசல் பிரதேச வடிகால்களில் தேங்கியிருந்த குப்பைகள் மற்றும் மண்கள் பிரதேச சபையின் ஊழியர்களினால் அகற்றப்பட்டது.

மேலும், அல்-மூனீர் பாடசாலை வடிகானில் நீண்டகாலமாக காணப்பட்ட பாரிய கல்லொன்று பிரதேச சபையின் கனரக வாகனத்தின் உதவியுடன் அகற்றப்பட்டு வடிகான் சுத்தம் செய்யப்பட்டது.

#தகவல் மையம்
சம்மாந்துறை பிரதேச சபை
☎ 067 203 0800

Photos from Sammanthurai Pradeshiya Sabha's post 15/05/2026

அப்துல் மஜீட் மண்டப வளாகத்தினை எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு 05 நாட்கள் வியாபார நடவடிக்கைக்காக கேள்வி கோரப்படுகின்றது.

#தகவல் மையம்
சம்மாந்துறை பிரதேச சபை
☎ 067 203 0800

08/05/2026

உள்ளுராட்சி சேவைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தும் நோக்கில் சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.ஜூனைடீன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை உபவேந்தர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில், மக்களுக்கு வழங்கப்படும் உள்ளுராட்சி சேவைகளை நவீன தொழில்நுட்பங்களின் ஊடாக மேலும் வினைத்திறனுடனும் எளிமையுடனும் வழங்குவது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

#தகவல் மையம்
சம்மாந்துறை பிரதேச சபை
☎ 067 203 0800

Photos from Sammanthurai Pradeshiya Sabha's post 30/04/2026

சம்மாந்துறை பிரதேச சபையின் கடையறை கேள்வி கோரல்

சம்மாந்துறை பிரதேச சபையின் நிருவாக எல்லைக்குட்பட்ட ஹிஜ்றா பொதுச்சந்தையின் 13,14,18,19,23,30,35,36,37,48,49,51,66,67,68,69,85,86,87,88,89,90 ஆலையடிப் பொதுச்சந்தையின் 02,09,10ஆம் இலக்க கடையறைகள் 2026.04.30 ஆம் திகதி தொடக்கம் 2029.04.29ஆம் திகதி வரைக்குமான காலப்பகுதிக்கு வாடகைக்கு விடுவதற்கான கேள்வி அழைப்புக்கள் கோரப்படுகின்றன.

#தகவல் மையம்
சம்மாந்துறை பிரதேச சபை
☎ 067 203 0800

Photos from Sammanthurai Pradeshiya Sabha's post 27/04/2026

சம்மாந்துறை பிரதேச சபையின் அனுசரணையுடன் புதிய வளத்தாப்பிட்டியில் சித்திரை புத்தாண்டு கலாச்சார விளையாட்டு விழா நேற்று மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

புதிய வளத்தாப்பிட்டி நாவலர் சனசமூக நிலையம், வாரணம் நற்பணி ஒன்றியம், நியூ லைப் அமைப்பு, வீனஸ் விளையாட்டு கழகம், உதவும் கரங்கள் அமைப்பு, MYDEEP இளைஞர் செலனி, நண்பர்கள் ஒன்றியம், அறம் அமைப்பு மற்றும் புதிய வளத்தாப்பிட்டி பொதுமக்கள் இணைந்து இந்நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளரும், பிரதேச சபையின் கௌரவ உறுப்பினருமான வீ.ஜெயசந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச சபையின் கௌரவ உப தவிசாளர் வீ.வினோகாந்த், சம்மாந்துறை சபையின் கௌரவ உறுப்பினர்களான ஏ.எல்.எம்.ஜிப்ரி, ஏ.எச்.எம்.காலித், சீ.டனோஜன், எம்.ஆர்.ஆசிக் முஹம்மட், எம்.ஐ.எம்.றிஸ்விகான், எஸ்.எல்.எம்.பஹூமி, ஏ.சீ.எம்.நயீம், வை.பீ.எம்.நபாஸ், ஏ.சதானந்தா, எஸ்.எல்.ஏ.நஸார், எம்.எல்.ஏ.கபூர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் என்பன நடைபெற்று, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

#தகவல் மையம்
சம்மாந்துறை பிரதேச சபை
☎ 067 203 0800

Photos from Sammanthurai Pradeshiya Sabha's post 20/04/2026

கீளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் “சகஸ்” நிகழ்ச்சிக்கமைய, உள்ளூராட்சி மன்றங்களின் கீழுள்ள முன்பள்ளி பாடசாலைகளை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள் வியாழக்கிழமை (16.04.2026) முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைய, சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட பிஸ்மில்லாஹ் முன்பள்ளி பாடசாலையில் சிரமதானப் பணிகள், மரநடுகை மற்றும் பாடசாலை சுற்றாடல் அழகுபடுத்தும் நிகழ்வு,
சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ பதில் தவிசாளர் வீ.வினோகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அதேபோன்று, பாத்திமா முன்பள்ளி பாடசாலையில் நடைபெற்ற சிரமதானப் பணிகள், மரநடுகை மற்றும் பாடசாலை சுற்றாடல் அழகுபடுத்தும் நிகழ்வு, சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் யூ.எல். அப்துல் மஜீட் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

மேலும், M.P.C.S முன்பள்ளி பாடசாலையில் நடைபெற்ற சிரமதானப் பணிகள், மரநடுகை மற்றும் சுற்றாடல் அழகுபடுத்தும் நிகழ்வு, சம்மாந்துறை பிரதேச சபையின் உள்ளூராட்சி உதவியாளர் திருமதி யூ. எஸ்.எம்.சதாத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச சபையின் நிதி உதவியாளர் எம். சத்தியநாதன், தொழில்நுட்ப உத்தியோகத்தர்களான ஏ.யோகானந்தன், எஸ்.சங்கீதன், பாலர் பாடசாலை ஆசிரியர்கள், உத்தியோகத்தர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#தகவல் மையம்
சம்மாந்துறை பிரதேச சபை
☎ 067 203 0800

Want your business to be the top-listed Government Service in Sammanthurai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Main Street , Ampara Road
Sammanthurai
32200

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15