28/10/2026
இன்று (28.10.2026) கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலக கூட்ட அரங்கில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி -பெ. அமுதா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் திருமதி. ஜி.லதா, இ.ஆ.ப., கூடுதல் பதிவாளர்(நுகர்வோர் பணிகள்) திரு. க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., கூடுதல் பதிவாளர் (நிதி மற்றும் வங்கியியல்) திரு. ச.சுப்பிரமணியன், கூடுதல் பதிவாளர் (வரவு, செலவு (ம) திட்டமிடுதல்) திரு. மு.பழனிவேலு, கூடுதல் பதிவாளர் (தேர்தல்) திருமதி. வீ.தேவகி, கூடுதல் பதிவாளர் (விற்பனை திட்டம் (ம) வளர்ச்சி) திரு. சொ. சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
#தமிழ்நாடு_கூட்டுறவு DIPR TN Chief Minister of Tamil Nadu