Ranipet District Police

Directions Website

Ranipet District Police The official page of the Ranipet District Police with verified news and information for TN Citizens

https://www.facebook.com/share/p/19Vmk8Um3S/
03/11/2026

https://www.facebook.com/share/p/19Vmk8Um3S/

சிறைச்சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய முன்னாள் டிஜிபி தலைமையில் குழு அமைப்பு!

தேனியில் 17 கைதிகள் தப்பிய சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் சிறைச்சாலை பாதுகாப்பை ஆய்வு செய்து, மேம்படுத்தவும், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் ஓய்வுபெற்ற டிஜிபி ஜே.கே. திரிபாதி தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Panel Formed Under Former DGP to Review Jail Security!

Following the escape of 17 prisoners in Theni, a high level committee headed by retired DGP J.K. Tripathi has been constituted on the directions of the Hon’ble Tamil Nadu Chief Minister to review and strengthen prison security across Tamil Nadu and prevent similar incidents.

https://www.facebook.com/share/p/1FLTU5BFVU/
03/11/2026

https://www.facebook.com/share/p/1FLTU5BFVU/

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) 2025 ஆம் ஆண்டுக்கான பொது ஆட்சேர்ப்புத் தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளனர்.

முடிவுகள் TNUSRB-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது: https://www.tnusrb.tn.gov.in/

Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB) has declared the results of Common Recruitment 2025

The results are available on the official TNUSRB website: https://www.tnusrb.tn.gov.in/

02/11/2026

கோவை மாநகரம் B4 உக்கடம் காவல் நிலையத்திற்குட்பட்ட டவுன்ஹால் பகுதியில் மது போதையில் காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, தகாத வார்த்தைகளில் இளைஞர் ஒருவர் பேசும் காணொளியானது 04.03.2026 அன்று நடந்த பழைய நிகழ்வின் காணொளி ஆகும்.
அந்த இளைஞர் மீது 04.03.2026 அன்றே காவலரை பணி செய்யாமல் தடுத்தல் மற்றும் கொலைமிரட்டல் விடுத்தல் ஆகிய குற்றங்களுக்காக B4 Ukkadam PS Cr.No.53/26 u/s 132, 351(3) BNS-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
எனவே உண்மைக்கு புறம்பாக பழைய காணொளிகளை சமூக வலைத்தளத்தில் பகிர்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகர காவல் துறையின் சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
Tamil Nadu Police Chief Minister of Tamil Nadu

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறைநாள்: 02.11.2026 வெளிமாநிலத்திலிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 226 கிலோ குட்கா புகையி...
02/11/2026

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை
நாள்: 02.11.2026

வெளிமாநிலத்திலிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 226 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் கடத்தி வந்த நபர் கைது – கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் பறிமுதல்

❇️ இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வோர் மற்றும் கடத்துவோர் மீது மாவட்டம் முழுவதும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

❇️ அதன் ஒரு பகுதியாக, இன்று (02.11.2026) சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லாலாபேட்டை ஜங்ஷன் பகுதியில், காவல் ஆய்வாளர் திருமதி. மங்கையர்க்கரசி அவர்கள் தலைமையிலான போலீசார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

❇️ இதையடுத்து, சுமார் ரூ.1,50,000/- மதிப்புள்ள 226 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் மற்றும் அவற்றைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட ஆந்திர மாநிலம், சித்தூரைச் சேர்ந்த ரமேஷ் (45), த/பெ. ஜோன்குமார் என்பவரைக் கைது செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

❇️ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை வெளிமாநிலங்களிலிருந்து கடத்தி வந்து விற்பனை செய்வோர் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.








02/11/2026

காவல்துறையின் துரித நடவடிக்கை – கொலை சம்பவத்தில் ஈடுபட்ட எதிரிகள் 12 மணி நேரத்தில் கைது.

மதுரை மாவட்டம்: சமயநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூர்யா என்ற குட்டிசாக்கு என்பவர் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட எதிரிகள் 12 மணிநேரத்திற்குள் கைது செய்யப்பட்டனர்.

Swift Police Action – Accused Arrested Within 12 Hours in Murder Case.

Madurai District: The accused involved in the murder of a person named Surya alias Kutti Sakku, within the limits of Samayanallur Police Station, were arrested within 12 hours of the incident.

02/11/2026

உங்கள் தனியுரிமை... உங்கள் பாதுகாப்பு!

தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதில் எச்சரிக்கையாக இருங்கள்.

YOUR PRIVACY, YOUR SECURITY!

Think before you share. Keep your personal data safe.

02/11/2026

காவல்துறையின் அதிரடி நடவடிக்கை: கத்தியை காட்டி லாரி ஓட்டுநர்களை மிரட்டி பணம் பறிக்க முயன்ற மூன்று பேர் கைது.

திண்டுக்கல் மாவட்டம்: எரியோடு காவல் நிலையம் எல்லை: கத்தியை காட்டி லாரி ஓட்டுநர்களை மிரட்டி பணம் பறிக்க முயன்ற மூன்று பேர் கைது- இரண்டு வாள் மற்றும் கார் பறிமுதல்.

Police Crackdown: Three Arrested for Attempting to Extort Money by Threatening Lorry Drivers with Knives.

Dindigul District: Eriyodu Police Station Limits: Three persons arrested for attempting to extort money from lorry drivers by threatening them with knives; two swords and a car seized.

02/11/2026

Address

Railway Station Road
Ranipet
632401

Alerts

Be the first to know and let us send you an email when Ranipet District Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share