01/06/2026
🛺 ஆட்டோ ஓட்டுநரிடம் வீண் தகராறு செய்து கல்லால் தாக்கிய சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட 2 நபர்கள் கைது.
🛺 Two men, including a history-sheeter, were arrested for assaulting an auto driver with stones following a quarrel.
🚔 Sembium Police Station
01/06/2026
🚫 கோயம்பேடு பகுதியில் உள்ள தனியார் மதுபான பார் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, பார் சீல் வைக்கப்பட்டது.
🚫 The licence of a private liquor bar in the Koyambedu area was temporarily suspended and the premises were sealed.
🚔 CMBT Police Station
01/06/2026
💰 நடந்து சென்ற மூதாட்டியை மிரட்டி பணம் பறித்துச் சென்ற நபர் கைது. பணம் மீட்பு.
💰 A man was arrested for threatening and robbing cash from an elderly woman. The stolen money was recovered.
🚨
👵 Elderly persons are often targeted by offenders, and the public are urged to stay alert.
📞 Immediately report about suspicious activities to the police for prompt assistance and prevention.
🚔 துறைமுகம் காவல் நிலையம்
01/06/2026
🏅 வேளச்சேரி காவல் நிலையம் சிறப்பான பணி ! 👏
🚫 வேளச்சேரியில் உள்ள தனியார் மேக்கப் ஸ்டுடியோ & ஸ்பாவில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், ஆறு பெண்களை சட்டவிரோதமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வருவது கண்டறியப்பட்டது.
🔸 👮♂️ மேலாளர் கைது செய்யப்பட்டார்.
🔸 🛡️ பாதிக்கப்பட்ட பெண்கள் பாதுகாப்பாக பெண்கள் அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.
🚫 During a surprise inspection conducted at a private makeup studio & spa in Velachery, six women were found to have been illegally engaged in prostitution.
🔸 👮♂️ The manager was arrested.
🔸 🛡️ The rescued women were safely admitted to a Government shelter home for women.
01/06/2026
👮♂️ செயின்ட் தாமஸ் மவுண்ட் காவல் நிலையம் - போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி 📢
📢 மடுவங்கரை பாலம் அருகே பணிபுரியும் வடஇந்திய தினக்கூலி தொழிலாளர்களுக்கு, போதைப்பொருள் பழக்கத்தின் தீமைகள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கான சட்டரீதியான விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ⚖️
🤝 தொழிலாளர்கள் ஆரோக்கியமான மற்றும் போதைப்பொருள் இல்லாத வாழ்க்கையை நடத்துமாறு 🏃♂️ அறிவுறுத்தப்பட்டதுடன், போதைப்பொருள் தொடர்பான செயல்பாடுகள் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது. 🚔
✨ அனைவரும் இணைந்து பாதுகாப்பான மற்றும் போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவோம்.
📢 A Drug Awareness Programme was conducted for North Indian daily wage workers near Maduvankarai Bridge to educate them about the harmful effects of drug abuse and the legal consequences of drug-related offences. ⚖️
🤝 The workers were encouraged to lead a healthy, drug-free life 🏃♂️ and were advised to immediately share information regarding any drug-related activities with the police. 🚔
✨ Together, let us build a safer and drug-free society.
01/06/2026
⚠️ கோயம்பேடு பகுதியில் நள்ளிரவில் - விபத்து.
😔 இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பெண்கள் மீது கார் மோதியதில், ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு 17 வயது சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
👮♂️ சம்பவம் தொடர்பாக 3 நபர்கள் கைது. கார் பறிமுதல்.
🔍 விசாரணையில்,
⚠️ விபத்து நடைபெறுவதற்கு முன்பு இரு தரப்பினரும் ஒரு தனியார் பாரில் சந்தித்து தகராறில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
💢 அந்த தகராறை பழிவாங்கும் நோக்கில், காரில் சென்ற நபர்கள் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்களை வேண்டுமென்றே மோதியதும் கண்டறியப்பட்டுள்ளது.
🚨 இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற தலைமறைவு எதிரிகளை கைது செய்ய 👮♂️ தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
⚠️ In a midnight incident in the Koyambedu area,
😔 A car rammed into a two-wheeler carrying two women, resulting in the death of one woman on the spot. Another 17-year-old girl has been admitted to hospital for treatment.
👮♂️ Three persons have been arrested in connection with the incident and the 🚗 car involved has been seized.
🔍 Police investigation revealed that,
⚠️ Prior to the incident, both parties had reportedly met at a private bar and picked up a quarrel.
💢 It was further found that the persons travelling in the car intentionally rammed the women on the two-wheeler as an act of revenge following the dispute.
🚨 Special teams 👮♂️ have been formed to trace and arrest the remaining absconding accused connected to the case, and intensive search operations are under way.
📍 CMBT காவல் நிலையம்
01/06/2026
🏅 தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலையம் சிறப்பான பணி ! 👏
🔪 ஓட்டேரி மயான பகுதிக்கு அருகில் ஏற்கனவே இரண்டு நபர்களைக் கத்தியைக் காட்டி மிரட்டிப் பணத்தைக் கொள்ளையடித்த சரித்திர பதிவேடு குற்றவாளியை ரோந்து பணியின் போது கைது செய்து, அவரிடம் இருந்த 40 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 💊
🚔 A history-sheeter, who had previously threatened and robbed two persons at knifepoint 🔪 near the Otteri crematorium area, was arrested during patrol duty. During the arrest, 40 narcotic tablets found in his possession were seized.
01/06/2026
🚔 போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் ANTF குழுவின் சிறப்பான பணி ! 👏
🔹 சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட சுமார் 12.5 கிலோ எடையுள்ள குட்கா போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த நபரை, ANTF குழுவினர் சிறப்பாக செயல்பட்டு கைது செய்தனர். மேலும், போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 🚫
🔹 The ANTF team acted swiftly and arrested an individual involved in the illegal sale of approximately 12.5 kilograms of banned Gutkha products. The contraband was also seized. 🚫
01/06/2026
🚔 வடக்கு கடற்கரை காவல் நிலையம் 👏
🔹 இருசக்கர வாகனத்தில் வந்து, சாலையில் நடந்து சென்ற நபரிடம் அலைபேசியை பறித்துச் சென்ற இரண்டு நபர்களை, வடக்கு கடற்கரை காவல் நிலைய காவலர்கள் விரைந்து செயல்பட்டு உடனடியாக கைது செய்தனர். ⚡
🔹 Demonstrating prompt action and effective policing, the personnel of North Beach Police Station swiftly traced and arrested two suspects in a two-wheeler who had snatched a mobile phone from a pedestrian walking along the road.
01/06/2026
Good Work by Harbour Police Station 👏
🔹 வேலை முடித்து வீடு திரும்பிய துப்புரவுப் பணியாளரை வழிமறித்து மிரட்டி, அவரிடமிருந்த பணத்தை பறித்துச் சென்ற நபரை, துறைமுகம் காவல் நிலைய அதிகாரிகள் குழு துரிதமாக செயல்பட்டு கைது செய்தனர். 👮♂️⚡
👏 குற்றவாளியை விரைவாக கண்டறிந்து கைது செய்த காவலர்களின் துரித நடவடிக்கை மற்றும் திறமையான புலனாய்வு மிகவும் பாராட்டத்தக்கது. 🏅
🔹 A team of officers from Harbour Police Station acted swiftly and successfully apprehended a suspect who had waylaid, threatened, and robbed a sanitation worker while she was returning home after completing her work.
👏 The swift action and efficient investigation carried out by the police personnel in quickly tracing and arresting the offender are highly appreciated . 🏅